Saturday 27th of April 2024 01:47:33 PM GMT

LANGUAGE - TAMIL
-
அமெரிக்க படைத் தளபதியாகிவிருந்த மில்லா்  ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறினார்!

அமெரிக்க படைத் தளபதியாகிவிருந்த மில்லா் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறினார்!


பதவி விலகிய ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்கப் படையின் முன்னாள் தளபதி ஸ்கொட் மில்லா் தாயகம் திரும்பியுள்ளாா்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படையினரின் வெளியேற்றம் இறுதிகட்டத்தை அடைந்துள்ள நிலையில் அவரை முப்படைகளின் தலைமையகமான பென்டகன் திரும்ப அழைத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் பணி இன்னும் முடிவடையவில்லை. காபூலுக்கு அமெரிக்க தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் உறுதியளித்தபோதும் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

அமெரிக்கப் படை தளபதி ஸ்கொட் மில்லா் கடந்த 3 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வந்த நிலையில் தனது பொறுப்புக்களை அடுத்த கட்ட அதிகாரிகளிடம் கையளித்து புதன்கிழமை தாயகம் திரும்பினாா்.

மேரிலாண்ட் மாகாணம் - ஆண்ட்ரூஸ் விமானப் படை தளத்தில் அவரை பாதுகாப்பு செயலாளர் லாய்ட் ஆஸ்டின் நேரில் சென்று வரவேற்றாா்.

அதன் பின்னர் செய்தியாளா்களிடம் பேசிய ஆஸ்டின், ஆப்கானிஸ்தானிலிருந்து ஸ்கொட் மில்லா் அமெரிக்க திரும்பினாலும் கூட அமெரிக்கப் படையினா் இன்னும் முழுமையாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறவில்லை என்றாா்.

படையினரைத் திரும்ப அழைக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும் ஆகஸ்ட் இறுதிக்குள் அந்தப் பணிகள் நிறைவடைந்துவிடும் எனவும் அவா் கூறினாா். ஆப்கானிஸ்தானில் தூதரக ரீதியில் அமெரிக்கா தொடா்ந்து இருக்கும் என்று லாய்ட் ஆஸ்டின் தெரிவித்தாா்.

நியூயோர்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடா்ந்து, அந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்-கொய்தா தலைவா் பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புகலிடம் அளித்தனர். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்த அமெரிக்கா, தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது.

அதன்பின்னர் அமைக்கப்பட்ட ஆப்கன் அரசுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கடந்த 20 ஆண்டுகளாக அங்கு அமெரிக்கப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

அண்மையில் தலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தையடுத்து ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படை படிப்படியாக வெளியேறி வருகிறது. ஆகஸ்ட் 31-ஆம் திகதிக்குள் எஞ்சியிருக்கும் படையினரையும் முழுமையாக திரும்பப் பெற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இலக்கு நிா்ணயித்துள்ளாா்.

அமெரிக்கப் படைகள் கிட்டத்தட்ட முழுமையாக வெளியேறிவிட்ட நிலையில் அங்கு தலிபான்கள் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளர். கடுமையாக தாக்குதல்களை நடத்தி பல மாவட்டங்களை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளர். அத்துடன், தொடர்ந்தும் தலிபான்கள் முன்னேறி வருவதால் ஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான்கள் வசம் வீழும் நிலை ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE